சென்னை

ங்கக்கடலின் தென் மேற்கு பகுதியில்  உருவான காற்றழுத்த் தாழ்வு பகுதியால் சென்னையில் கனமழை பெய்துள்ளது.

தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதன் காரணமாக, கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி உள்ளது.

இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. அதற்கடுத்த, 2 தினங்களில் இது மேற்கு திசையில், தமிழகம்-இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணியளவில் கனமழை பெய்தது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு, கிண்டி, ஆலந்தூர்,வடபழனி, வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி, பூந்தமல்லி,மாங்காடு, குன்றத்தூர் மேடவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.