சென்னை: சென்னையில் போதைபொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், போதைப்பொருள் பயன்படுத்தியதாக சினிமா நடிகை அஞ்சு கிருஷ்ணா, துணை நடிகை உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு திரையுலகில் பலர் போதைக்கு அடிமையாகி இருப்பது, அவ்வப்போது நடைபெறும் கைது நிகழ்வுகளால் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் உள்பட பலர் கைது செய்யப்பட்ட விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், போதைப்பொருள் பயன்படுத்தியதாக சினிமா நடிகை அஞ்சு கிருஷ்ணா உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் போதைப்பொருள் அடமாட்டம் அதிகரித்துள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, போதை பொருள் விற்பனையை காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதைத்தொடர்ந்த, அந்த பகுதியில் போலீசார் நடத்திய விசாரணையில், நெசப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் (35) என்ற இளைஞரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்து வருவது, சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ்குமார் என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பலருக்கு போதை பொருள் சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, திரைப்பட நடிகை அஞ்சு கிருஷ்ணா (30) கைது செய்யப்பட்டார். இவருடன் தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வரும் வின்சி என்கிற நிவேதா (26), பெரியபணிசேரியை சேர்ந்த கார்த்திக் ராஜா (31), காட்டுப்பாக்கத்தை சேர்ந்த எஸ்வந்த் (25), மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஸ்ரீராம் (33), கோவிலம்பாக்கத்தை சேர்ந்த அல்பின்சா (27), சென்னை மண்ணடியை சேர்ந்த தமிம் நிஸ்வான் (27) ஆகிய 7 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட 9 பேரும் பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப் பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மெத்தபெட்டமைன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள், 9 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டுள்ள நடிகை அஞ்சு கிருஷ்ணா ‘ஓம் வெல்லமலை’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
[youtube-feed feed=1]