சென்னை: எதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா மு.க.ஸ்டாலின் அவர்களே? என்றும், தமிழக சட்டமன்றம் திமுகவின் பொதுக்கூட்ட மேடையில்லை என்றும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சட்டப்பேரவைக்கு அதிமுக எம்எல்ஏக்கள், யார் அந்த சார் பேட்ஜ் அணிந்து வந்ததுடன், டங்கஸ்டன் சுரங்கத்தக்கு எதிராக முகக்கவசம் அணிந்து வந்தும் பரபரப்பை ஏற்படுத்தினர். இது சமூக வலைதளங்களில் பேசும்பொருளானது. ஆனால், முதலமைச்சர் அவையில் பேசும்போது, யார் எந்த யார் என பொள்ளாச்சி குறித்து விமர்சனம் செய்ததுடன், டங்ஸ்டன் சுரங்கத்தக்கு காரணம் அதிமுகதான் என்றும் பதிவு செய்தார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
ஆளுங்கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும் முடிந்துவிட்டதா சட்டப்பேரவை?
சட்டப்பேரவையின் கேமராக்கள் இன்றும் எதிர்க்கட்சியின் பக்கம் திரும்பவே இல்லை.
எதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா மு.க.ஸ்டாலின் அவர்களே?
எதற்காக இவ்வளவு அஞ்சி நடுங்குகிறீர்கள்?
“#யார்_அந்த_SIR?” என்ற நீதிக்கான கேள்வி உங்களை அவ்வளவு உறுத்துகிறது என்றால், மீண்டும் கேட்கிறேன் ,
யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் அரசு?
மக்கள் நலனுக்கான, எதிர்க்கட்சியின் கேள்விகளை மக்கள் பார்த்துவிடக் கூடாது என்று ஸ்டாலின் மாடல் அரசு எத்தனிப்பது ஜனநாயகப் படுகொலை!
தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை, எந்தவித ஒளிவு மறைவுமின்றி, முழுமையாக, மக்களின் குரலான எதிர்க்கட்சியின் கருத்துக்களை மக்களுக்கு நேரடி ஒளிபரப்ப வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடு சட்டமன்றம், பொதுமக்களின் தேவையை சபையேற்றி, சட்டமியற்றி, திட்டமியற்றி செயல்படும் தமிழக மக்களின் மேடை;
திமுகவின் பொதுக்கூட்ட மேடையல்ல!
இவ்வாறு தெரிவித்துள்ளார்.