சென்னை

ருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு தேவையான ஆவணங்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வரும் 21 ஆம் தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும். வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான இடங்களில் சேர்ந்து விடுவதாக புகார்கள் எழுந்தன. இந்த வருடம் அவ்வாறு நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களுடன் அளிக்க வேண்டிய ஆவணங்களின் பட்டியஒல் பின் வருமாறு.

1. டிசி எனப்படும் மாற்றுச் சான்றிதழ்

2. 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

3. 11 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

4. 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

5. 12 ஆம் வகுப்பு தேர்வு நுழைவுச் சீட்டு

6. ஆறாம் வகுப்பில் இருந்து 12 வரை படித்ததற்கான சான்றிதழ்

7. நிரந்தர வகுப்பு சான்றிதழ்

8. நீட் தேர்வு மதிப்பெண் பட்டியல்

9. விளையாட்டு வீரர் ஒதுக்கீடு எனில் அதற்கான சிறப்பு படிவம்

10. முன்னாள் ராணுவ வீரர் குழந்தைகள் என்றால் அதற்கான சிறப்பு படிவம்

11. உடல் ஊனமுறோர் ஒதுக்கீடு என்றால் அதற்கான சிறப்பு படிவம்

12. வருமான சான்றிதழ் (தலித் மற்றும் பழங்குடியினருக்கு மட்டும்)

13. வெளி மாநிலங்களில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்னும் சான்றிதழ்

14. பெற்றோர்களின் சான்றிதழ்கள்

அ) பிறப்பு சான்றிதழ் / ரேஷன் அட்டை / பாஸ்போர்ட்

ஆ) 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு/ பட்டப்படிப்பு சான்றிதழ்

இ) பெற்றோரின் வகுப்பு சான்றிதழ்

வெளி மாநில மாணவர்கள் தமிழ்நாடு ஒதுக்கிட்டில் சேர்வதை தடுக்க பெற்றோர்களின் சான்றிதழ் கேட்கப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.