சென்னை: சென்னையில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நிகழ்ச்சியில் பேசும்போது, திமுக ஆட்சி விளிம்புநிலை மக்களை கைதூக்கி விடுகிறது என்று கூறினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன்படி,
தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நிதி உதவிகளை வழங்கிகினார்.
சமூக நல்லிணக்க கிராம ஊராட்சி விருதை முதல்வரிடம் 10 ஊராட்சி சிறப்பு அலுவலர்கள் பெற்றனர்.
சென்னை கோட்டூர்புரத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் முதலமைச்சர் வழங்கினார்.
கோயம்பேடு வணிக வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பிலான 4000 ச.அ கொண்ட கடைகளை ஜெம்பீம் சங்கத்துக்கு வழங்கினார்.
ஆதிதிராவிடர், பழங்குடியின நலத்துறைக்கான கட்டடங்களை காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில்போது, திமுக ஆட்சி விளிம்புநிலை மக்களை கைதூக்கி விடும் வகையில் செயல்பட்டு வருகிறது என்றும், சமத்துவ சமுதாயம் அமைய வேண்டும் என்பதே அரசின் லட்சியம் என கோட்டுர்புரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வாய்ப்புகள் மறுக்கப்படும் மக்களை கைதூக்கி விடும் வகையில் திமுக அரசு செயல்படுகிறது. சமூகம் முன்னேற கல்விதான் அடிப்படை; அதனால் கல்வியில் அதிக கவனம் செலுத்துகிறோம். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் அரசின் லட்சியம் என தெரிவித்தார்
தென் மாவட்டங்களில் கபடி பயிற்சி மையங்கள் உள்ளிட்ட மணத்தி கணேசன் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். ஒரு சமுதாயம் வளர வேண்டும் என்றால் அதற்கு கல்விதான் அடிப்படை என தெரிவித்தார். . வாய்ப்புகள் மறுக்கப்படும் மக்களை கைதூக்கி விடும் வகையில் திமுக அரசு செயல்படுகிறது. சமூகம் முன்னேற கல்விதான் அடிப்படை; அதனால் கல்வியில் அதிக கவனம் செலுத்துகிறோம். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் அரசின் லட்சியம் என தெரிவித்தார்.