சென்னை: நீர் மறுதேர்வை கண்டித்து, நாளை நடைபெறும் ‘நீட்’ எதிர்ப்பு போராட்டத்தில் திமுகவினர் பங்கேற்பாரகள் என திமுக அமைப்பு செயலாளர்   ஆர்.எஸ்.பாரதி  தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் வெளியான நிலையில், தேர்வை ரத்து செய்துள்ளது தேசிய தேரவு முகமை. இதையடுத்து  மறுதேர்வு ஜூன் 21ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் பலரும் தொடர்புடையதாக கூறப்படும் நிலையில் தற்போதுவரை 5க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இதன் காரணமாக, மருத்துவக் கல்விக்கான “நீட்” தேர்வை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக நீண்டகாலமாக குரல் கொடுத்து வரும் திராவிடர் கழகம், மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாளை (16.05.2026) மாநிலம் முழுவதும் “மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்” நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “மருத்துவக் கல்லிவக்கான தகுதித் தேர்வு என்ற பெயரில் “நீட்” என்ற தேர்வை ஒன்றிய அரசு திணித்து, அதன் காரணமாக கடந்த பத்து ஆண்டுகளில் பல நூறு மாணவ, மாணவியர்கள் உயிர்பலி ஆகியுள்ளனர். இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கனவு பறிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே-3 அன்று நடைபெற்ற நீட் தேர்வில் மிகப் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றதை ஒன்றிய பாஜக அரசே ஏற்றுக் கொண்டு இந்த அண்டு நீட் தேர்வை ரத்து செய்துள்ளது. எனவே, மருத்துவக் கல்விக்கான “நீட்” தேர்வை முற்றாக இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, “திராவிடர் கழகம்” 16.05.2026 அன்று மாநிலம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் “மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்” நடத்திட உள்ளதை தி.மு.கழகம் வரவேற்பதோடு,

தமிழ்நாட்டு மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அந்தந்த பகுதியில் திராவிடர் கழகம் நடத்தும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில், கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், இளைஞர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]