லண்டன்:
வால்ட் டிஸ்னி கொரோனா காரணமாக 32,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
வால்ட் டிஸ்னி மார்ச் மாத இறுதிக்குள் 32,000 ஊழியர்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளது, வைரஸ் காரணமாக வால்ட் டிஸ்னியின் பூங்காக்கள் மற்றும் ரிசார்ட்டுகள் மிகவும் பாதிக்கப்பட்டதால் டிஸ்னி இந்த முடிவுக்கு வந்துள்ளது.
அமெரிக்க பண பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திற்கு கூடுதல் பணி நீக்கம் செய்யப்படுவதாக வால்ட் டிஸ்னி தெரிவித்துள்ளது. வால்ட் டிஸ்னியின் சமீபத்திய ஆண்டு அறிக்கை படி 2,23,000 பேரை டிஸ்னி பயன்படுத்துகிறது. கொரோனா காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் வால்ட் டிஸ்னி 28,000 பேரை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்திருந்தது. ஆனால் தற்போது 4,000 பேரை அதிகரித்துள்ளதாக அமெரிக்க பண பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.
ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி, எதிர்காலத்தில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய மருத்துவ திட்டங்களையும் குறைக்கப் போவதாக எச்சரித்துள்ளது, மேலும் அதிகமான ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாகவும் டிஸ்னி அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்ட வால்ட் டிஸ்னி கொரோனா காரணமாக இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது, மேலும் பிளாக் விடோ போன்ற முக்கிய திரைப்படங்களை தாமதப்படுத்த போவதாகவும் அறிவித்துள்ளது, பிளாக் விடோ என்ற படம் இந்த ஆண்டின் மிகப் பெரிய பிளாக்பஸ்டர்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.