சென்னை:

பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கை நேரடி கலந்தாய்வு மூலமே நடத்த வேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நேரடி கலந்தாய்வு முறையே தொடர வேண்டும்.

ஆன்லைன் கலந்தாய்வுடன் நேரடி கலந்தாய்வையும் கடைபிடிக்க வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கு நேரடி கலந்தாய்வு உதவியாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.