சென்னை: சென்னையில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் ஜிபிஎஸ் வசதிகளுடன்பேருந்து வருகை அறிவிப்புப் பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC), நிகழ்நேரப் பேருந்து வருகைத் தகவல்களை வழங்குவதற்காக, சென்னை முழுவதும் ஜிபிஎஸ் அடிப்படையிலான எல்இடி காட்சிப் பலகைகளை அமைத்து வருகிறது. ஜனவரி 2026 நிலவரப்படி, 28 இடங்களில் இதற்கான சோதனைகள் நிறைவடைந்துள்ளன. ஒரு நுண்ணறிவுப் போக்குவரத்து அமைப்பின் ஒரு பகுதியான இந்தத் திட்டம், 616 இடங்களில் (500-க்கும் மேற்பட்ட நிறுத்தங்கள் மற்றும் 71 முனையங்கள்) பேருந்துகள் வந்து சேரும் உத்தேச நேரம், வழித்தட எண்கள் மற்றும் சேருமிடங்களைக் காண்பிக்கும்.

இதன் காரணமாக, பேருந்து பயணிகள், பேருந்துக்காக காத்திருக்கும் நேரம் மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசதி சென்னை முழுவதும் உள்ள சுமார் 616 இடங்களில் அமைக்க முடிவு செய்யப்படடு உள்ளது.
சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்பவர்களின் வசதிக்காக, ஜிபிஎஸ் (GPS) தொழில்நுட்பத்துடன் கூடிய நேரலை பேருந்து வருகை அறிவிப்புப் பலகைகளை அமைக்கும் பணியை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பயணிகள் பயணம் செய்யும் விதம் பெரிய அளவில் மாற்றம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதற்கட்டமாக 18 பேருந்து நிறுத்தங்களில் செய்யப்பட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது நகரின் 616 இடங்களுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக 71 பேருந்து முனையங்கள்: பிராட்வே, தியாகராயர் நகர், கிண்டி மற்றும் கோயம்பேடு உள்ளிட்ட 71 முக்கியப் பேருந்து நிலையங்களில் பெரிய அளவிலான திரைகள் அமைக்கப்படும்.
இனி பேருந்து எப்போது வரும் என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கத் தேவையில்லை. பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவிகள் மூலம், அந்தப் பேருந்து தற்போது எங்கே வந்து கொண்டிருக்கிறது என்பதைப் பேருந்து நிறுத்தங்களில் உள்ள டிஜிட்டல் பலகைகள் துல்லியமாகக் காட்டும்.
இந்த அமைப்பின் சிறப்பம்சங்கள்
நேரலை வருகை நேரம் (ETA): அடுத்த பேருந்து எத்தனை நிமிடங்களில் வரும் என்ற தகவல்.
தட விவரங்கள்: எந்தெந்த எண்கள் கொண்ட பேருந்துகள் அந்த நிறுத்தத்திற்கு வந்து கொண்டி ருக்கின்றன என்ற விவரம்.
இருமொழி அறிவிப்பு: தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தகவல்கள் திரையிடப்படும். முதற்கட்டமாக 18 பேருந்து நிறுத்தங்களில் செய்யப்பட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது நகரின் 616 இடங்களுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையின் முக்கியப் போக்குவரத்து மய்யங்களை இணைக்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கியமான 500 நிறுத்தங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
பிராட்வே, தியாகராயர் நகர், கிண்டி மற்றும் கோயம்பேடு உள்ளிட்ட 71 முக்கியப் பேருந்து நிலையங்களில் பெரிய அளவிலான திரைகள் அமைக்கப்படும்.
முக்கியச் சந்திப்புகள் மற்றும் பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் இவை நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]