புனே: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில், துவக்க வீரர் ரோகித் ஷர்மாவுடன், ஷிகர் தவான் களமிறங்குவார் என்று தெரிவித்துள்ளார் இந்திய கேப்டன் விராத் கோலி.
இந்தியா – இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடர், புனேயில் நாளை தொடங்குகிறது.
அதனையடுத்து, துவக்க வீரராக ரோகித் ஷர்மா ஆடுவது உறுதியான ஒரு விஷயம் என்ற நிலையில், அவருக்கு துணையாக யார் வருவார் என்ற கேள்வி எழுந்தது. தவானா? அல்லது கேஎல் ராகுலா? என்ற குழப்பம் நிலவியது.
இந்நிலையில், அந்தக் குழப்பத்திற்கு விடை கிடைத்துள்ளது. துவக்க வீரர் ரோகித் ஷர்மாவுடன், ஷிகர் தவான் களமிறங்குவார் என்று கேப்டன் விராத் கோலி அறிவித்துள்ளார்.
ஏற்கனவே நடந்துமுடிந்த டி-20 தொடரில், முதல் போட்டியில் வாய்ப்பு பெற்ற ஷிகர் தவான் வெறும் 4 ரன்கள் மட்டுமே அடித்தார். அதனையடுத்து, அவருக்கு மீதமிருந்த 4 போட்டிகளிலும் வாய்ப்பே கிடைக்கவில்லை.