திருவனந்தபுரம்:  சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை தொடங்கி உள்ள நிலையில், அங்கு  பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று மற்றும் நேற்று தினங்களில், நாள் ஒன்றுக்கு  60ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா காலக்கட்டத்துக்கு பிறகு, நடப்பாண்டு கட்டுப்பாடுகள் களையப்பட்ட சபரிமலைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், ஆன்லைன் பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், 41நாட்கள் நடை திறந்திருக்கும்படியான மண்டல பூஜை கடந்த 16ந்தேதி மாலை கோவில் நடை திறப்பும் தொடங்கி உள்ளது. அதைத்தொடர்ந்தது, 17ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, நாடு முழுவதும் இருந்தும் பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு குவிந்து வருகின்றனர். கார்த்திகை 1ம் தேதியான நேற்று முன்தினம் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். 2வது நாளாக நேற்று 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். அவர்கள் அனைவரும் தரிசனம் செய்தாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், செய்தியாளர்களிடம் பேசிய திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன், பக்தர்கள்  ‘தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கு பக்தர்களுக்கு எந்த சிரமமும் இருக்காது. முன்கூட்டியே முன்பதிவு செய்ய முடியாவிட்டாலும், சபரிமலை செல்லும் வழியில் நிலக்கல் உட்பட கேரளாவில் 13 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள உடனடி முன்பதிவு வசதியை  பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பிட்ட நேரத்திலேயே தரிசனம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. குறிப்பிட்ட நாளில் 24 மணி நேரத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அதுமட்டுமில்லாமல் எவ்வளவு கூட்டம் இருந்தாலும்  ஆன்லைனில் குறிப்பிட்ட நேரத்திலேயே தரிசனம் செய்வதற்கு வசதி ஏற்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.