திருவனந்தபுரம்
திருவிதாங்கூர் தேவசம் போர்டு எரிமேலியில் விபூதி, குங்கும கட்டண வசூலை கைவிடுவதாக அறிவித்துள்ளது,
சபரிமலை செல்லும் பக்தர்கள் எரிமேலியில் இறங்கி பேட்டை துள்ளல் நடத்தி விட்டு அங்குள்ள சாஸ்தா கோவிலில் விபூதி, குங்குமம் இடுவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக முதன் முதலில் மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு பேட்டை துள்ளல் அவசியமான ஒன்றாகும்.
இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், எருமேலியில் விபூதி, குங்குமம் வைக்க கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவித்தது. இதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்ற்த்தில் வழக்கு தொடரப்ப்ட்து.
வழக்கு விசாரணையின்போது, பேட்டை துள்ளலுக்கு பின் இலவசமாக பக்தர்கள் சந்தனம், குங்குமம் இடலாம் என தேவஸ்தானம் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. எனவே குத்தகைக்காரர்கள் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒத்தி வைத்தனர்.