பெங்களூரு: நரேந்திர மோடியின் 5 ஆண்டுகால ஆட்சியைவிட, தனது தந்தை தேவகெளடாவின் 10 மாதகால ஆட்சி சிறப்பாக இருந்ததாக கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.
கர்நாடகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த மோடி, “காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதாதள கூட்டணியை தவிர்த்து, ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் பக்கம் நிற்கிறது” என்று வழக்கம்போல ராணுவ தாக்குதலை தனது தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார்.
இதற்கு பதிலளித்த குமாரசாமி, “எனது தந்தையின் 10 மாத கால ஆட்சி, மோடியின் ஆட்சியைவிட பல மடங்கு சிறந்ததாக இருந்தது. எனது தந்தை தேவகெளடா பிரதமராக இருந்தபோது, காஷ்மீரில் எந்த தாக்குதலும் நிகழவில்லை.
நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் குண்டு வெடிக்கவில்லை. பாகிஸ்தானுடன் எந்த மோதலும் நிகழவில்லை. ஆனால், மோடியின் ஆட்சியில் என்னவெல்லாம் நடந்து கொண்டுள்ளது? என்று சராமரியாக கேள்வி எழுப்பினார்.
மதசார்பற்ற ஜனதாதள தலைவர் தேவகெளடா, கடந்த 1996ம் ஆண்டு ஜுன் முதல், 1997ம் ஆண்டு ஏப்ரல் வரை பிரதமராக பதவி வகித்தார் என்பது நினைவுகூறத்தக்கது.
– மதுரை மாயாண்டி