அறிவோம் தாவரங்களை – எழுத்தாணி பூண்டு செடி
எழுத்தாணி பூண்டு செடி. (PRENANTHES SARMENTOSUS)
தமிழகம் உன் தாயகம்!
நஞ்சை நிலங்களில் வரப்புகளில் தானே வளரும் நல்ல செடி நீ!
மார்பக வளர்ச்சிக்குப் பயன்படும் மருத்துவ மூலிகை இலைசெடி நீ!
நிலக்கடம்பு, மிட்டிருக்கன் செவி, முத்தெருக்கன் செவி என மூவகைப் பெயரில் விளங்கும் முத்துச் செடி நீ!
“கரப்பான்…..சொறி சிரங்கு காணாது அகலும்; முரப்பாம் எழுத்தாணிக்கு ஏது” எனச் சித்தர்கள் போற்றி புகழும் சிறப்பு மூலிகைச் செடி நீ!
தேரையர் போற்றும் திவ்யச் செடி நீ!
சீதபேதி, சொறி, சிரங்கு ,ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, மூச்சுப்பிடிப்பு, மார்பக நலம், அழற்சி, நிமோனியா, நெஞ்சுவலி, ஒற்றைத் தலைவலி, கல்லீரல் நோய், நீர்ப்பெருக்கு, கரப்பான், பரு, பிளவை ஆகியவற்றிற்கு ஏற்ற மருத்துவ மூலிகை நீ!
தோல் நோய்களுக்கு எண்ணெய் தரும் இலை செடியே!
இலைகள் வேர்கள் என எல்லாம் பயன்படும் நல்ல நிலக்கடம்பு செடியே!
முட்டை வடிவ காம்பு கொண்ட முதன்மைச் செடியே!
நீலம் மற்றும் மஞ்சள் நிறப் பூப்பூக்கும் நித்திலச் செடியே!
எழுத்தாணி போன்ற தண்டினைப் பெற்ற இனிய செடியே!
விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் விந்தைச் செடியே!
நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!
நன்றி :பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)
முதல்வர்
ஏரிஸ் கலைக் கல்லூரி,
வடலூர்.📱9443405050.