அறிவோம் தாவரங்களை – கொடிவேலி
கொடிவேலி. (Plumbago zeylanica)
தென்னிந்தியா உன் தாயகம்!
எல்லா இடங்களிலும் காணக் கிடைக்கும் இனிய கொடி நீ!
உன் இன்னொரு பெயர் சித்தர் மூலம்!
தென் கிழக்கு ஆசியா, மலேசியா நாடுகளில் வளர்ந்திருக்கும் மூலிகைக் கொடி நீ!
செங்கொடிவேலி, வெள்ளை சித்திரமூலம் என இருவகையில் விளங்கும் இனிய கொடி நீ!
கால் ஆணி, ரத்த மூலம், கொழுப்புக் கட்டி, வயிற்றுப்போக்கு, வாதநோய், வாய்வுத்தொல்லை, தோல் நோய்கள், தலை வழுக்கை, உடல்வலி, இருமல், காய்ச்சல், கட்டிகள், குட்ட நோய், சொறி, சிரங்கு, தேமல், படை, மேக நோய்கள், அஜீரணம் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!
‘பத்து இருமூலம் பாகாய் உருகும் பாரீரே’ என அகத்தியர் போற்றும் அற்புதக் கொடி நீ!
இலை, தண்டு, வேர், பட்டை என எல்லாம் பயன்படும் நல்ல கொடி நீ!
5 மீ உயரம் வரை வளரும் அற்புதக் கொடியே!
கஷாயம், களிம்பு, தைலம் எனப் பல வகையில் பயன்படும் நல்வகைக் கொடியே!
சித்தர்கள் போற்றும் காயசித்தியே!
விஷத்தன்மை கொண்ட வேர் கொடியே!
வலிகளைப் போக்கும் நிவாரணியே!
வெப்பத் தன்மை கொண்ட வேலிக்கொடியே!
முட்டை வடிவ இலை கொடியே!
தொற்றிப் படரும் பற்றுக் கொடியே!
கூர்கொண்ட நீள் வடிவக் கனிக்கொடியே!
ஆண்டு முழுவதும் பூக்கும் அழகு கொடியே!
நீவிர் பல்லாண்டு வாழ்க வளர்க உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)
முதல்வர்
ஏரிஸ் கலைக் கல்லூரி,
வடலூர்.📱9443405050.
வடலூர்.📱9443405050.