பெங்களூரு
ஐபிஎல் 2022 போட்டிகளுக்கான கிரிக்கெட் வீரர்களின் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம் வெளியாகி உள்ளது.
பெங்களூருவில் ஒரு நட்சத்திர ஓட்டலில் ஐபிஎல் 2022 போட்டிகளுக்கான கிரிக்கெட் வீரர்கள் நாள் ஏலம் நேற்றுடன் முடிவடைந்தது.. இந்த ஏலத்துக்கான வீரர் பட்டியலில் முதலில் 590 பேர் இடம் பெற்றிருந்தனர். பிறகு நேற்று 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் விளையாடிய 10 வீரர்கள் இணைக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 600 ஆனது. இதில் 317 பேர் இந்திய வீரர்கள் ஆவார்கள்
இந்த ஏலத்தில் இந்திய இளம் கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன், தீபக் சாகர், ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகுர் ஆகியோர் அதிக விலைக்கு வாங்கப்பட்டனர். குறிப்பாக தீபக் சாகரைத் தக்க வைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ/14 கோடி வழங்க முன் வந்தது. ஆயினும் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ரூ.15.25 கோடிக்கு வாங்கியது
இந்த ஏலத்தில் இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெயினாவை யாரும் விலைக்கு வாங்கவில்லை. ரெய்னா ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 4 ஆவதாக இருந்தும் அவரை வாங்க எந்த அணியினரும் முன் வராதது குறிப்பிடத்தக்கதாகும்.