
அபுதாபி: கொரோனா தடுப்பு மருந்து, ஐக்கிய அரபு அமீரக நாட்டில் இலவசமாக மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், அந்நாட்டில் உள்ள 7 அமீரகங்களில், எந்தெந்த மையங்களில் இந்த மருந்து வழங்கப்படும் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.
அபுதாபி, ஷார்ஜா, துபாய், அஜ்மான், ஃபுஜேரா, உம் அல் குவான் மற்றும் ராஸ் அல் கெய்மா போன்றவைதான் அந்த 7 அமீரகங்கள்.
ஒவ்வொரு அமீரகத்திலும் எந்தெந்த மையங்களில், என்னென்ன கிழமைகளில், எந்த நேரத்தில் கிடைக்கும் என்ற விரிவான தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தொடர்பு எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அமீரக மக்கள் கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாகப் பெற்று பயனடையலாம்.
கீழ்காணும் இணைப்பில் சென்று விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
Patrikai.com official YouTube Channel