அறிவோம் துவாரங்களை – கரிசலாங்கண்ணி செடி

கரிசலாங்கண்ணி செடி. (Eclipta prostrata)
இந்தியா,இலங்கை உன் தாயகம்!
கரிசல் நில நிறம் போன்று உன்சாறு காணப்படுவதால் நீ கரிசலாங்கண்ணி ஆனாய்!
வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை நீ!
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய அழகு செடி நீ!
பல்லவ மன்னர்களால் வரி போடப்பட்ட பணக்கார செடி நீ!
கரியசாலை, கரிசனம், கையாந்தகரை, கரப்பான், கரிசாலை, பிருங்கலாஜம்,தேகராஜம்
எனப் பல்வேறு பெயர்களில் பரிணமிக்கும் பல பொருள் குறித்த ஒரு சொல் கிளவி நீ!
வெள்ளை,மஞ்சள்,சிவப்பு, நீலக் கரிசலாங்கண்ணி எனப் பலவகைகளில் விளங்கும் நலமிகு செடி நீ!
மஞ்சள் காமாலை, சிறுநீர் எரிச்சல், பெரும்பாடு, குழந்தைகளின் சளி, காய்ச்சல், புற்றுநோய், கண்பார்வை, கல்லீரல், மண்ணீரல் நோய்கள், தோல் நோய்கள், கூந்தல் வளர்ச்சி, தலைப் பொடுகு, பல்நோய்கள்,காயம் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!
வீடுகளுக்கு அழகு சேர்க்கும் அலங்காரச் செடியே!
வெள்ளை நிறப் பூப்பூக்கும் விநோதச்செடியே!
ஓராண்டுக் காலம் வரை வாழும் உன்னதச் செடியே!
மானிடர்க்கு ஏற்ற ஞான மூலிகையே!
உடம்பை வசீகரமாக்கும் உன்னதச் செடியே! நீண்ட ஆயுளைத் தரும் நேர்த்திச் செடியே!
நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)
முதல்வர்
ஏரிஸ் கலைக் கல்லூரி,
வடலூர்.📱9443405050.
Patrikai.com official YouTube Channel