சென்னை
தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 3086 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,97,116 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 10,780 பேர் உயிர் இழந்து 6,50,856 பேர் குணம் அடைந்து தற்போது 38,093 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 845 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இதுவரை சென்னையில் 1,92,527 பேர் பாதிக்கப்பட்டு 3,556 பேர் உயிர் இழந்து 1,77,546 பேர் குணம் அடைந்து தற்போது 11,425 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 41,845 பேர் பாதிக்கப்பட்டு 643 பேர் உயிர் இழந்து 39,629 பேர் குணம் அடைந்து தற்போது 1,573 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக கோவை மாவட்டத்தில் 40,690 பேர் பாதிக்கப்பட்டு 527 பேர் உயிர் இழந்து 36,411 பேர் குணம் அடைந்து தற்போது 3,752 பேர் சிகிச்சையில் உள்ளனர்.