அறிவோம் தாவரங்களை – அதிவிடயம் செடி
அதிவிடயம் செடி. (Aconitum heterophyllum Wall ex Royle.)
மலைப்பகுதியில் வளரும் குறுஞ்செடி நீ!
2.5 மீ உயரம் வளரும் சிறு செடி நீ!
மாதிரி, பங்குரை என இரு வேறு பெயர்களில் விளங்கும் இனிய செடி நீ!
சளி, அஜீரணம், காய்ச்சல், இருமல், வயிற்றுப் போக்கு, வயிற்றுவலி ,பசியின்மை, வாந்தி ,மூலம், தாய்ப்பால் அதிகரிப்பு, கை, கால், இடுப்பு, மூட்டுவலிகள், கழிச்சல் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!
தேநீர் தயாரிக்க வேர் தரும் வினோதச் செடியே!
ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவத்தில் பயன்படும் சிறப்பு மூலிகைச் செடியே!
பெரிய இலைகளை உடைய சிறிய செடியே!
நீல வண்ணப் பூப்பூக்கும் ஞானச் செடியே!
சாம்பல் வண்ண வேர்களைக் கொண்ட மூலிகைச் செடியே!
தாம்பத்திய உறவை மேம்படுத்தும் தங்கச்செடியே!
ஏற்றுமதி செய்யப்படும் இனிய செடியே!
ஒரு கிலோ சுமார் ₹5000.00 வரை விலைபோகும் பணப்பயிரே!
துவர்ப்புச் சுவை கொண்ட தொன்மைச் செடியே!
ஆண்மையைப் பெருக்கும் அதிசயச் செடியே!
ஆரோக்கியத்தை வளர்க்கும் செடியே !
நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)
முதல்வர்
ஏரிஸ் கலைக் கல்லூரி,
வடலூர்.📱9443405050.