தஞ்சாவூர்: மனஉளைச்சலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ள அய்யம் பேட்டை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவா் தினேஷ்குமார் (40) தற்கொலை செய்துகொண்டார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளராக பணியில் சோ்ந்தவர் தினேஷ்குமார் . இவர் திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி காவல்நிலையத்தில் பணியில் இருந்தபோது தாழ்த்தபட்ட சமூகத்தை சோ்ந்தவரை ஒருவரை, அடித்தது தொடா்பாக அவா் மீது மனித உரிமை ஆணையம் வழக்கு தொடா்ந்தது. இதையடுத்து, அவர் ஆழ்வார்குறிச்சியில் இருந்து தஞ்சாவூர் அருகே உள்ள பாபநாசம் காவல்நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.
பின்னர், ஒரு மாதம் மருத்துவ விடுப்பு எடுத்ததுடன், குடும்பத்துடன் பாபநாசத்தில் குடியேறினார். ஆனால், அவருக்கு மீண்டும் பணிமாற்றம் கொடுக்கப்பட்டது. அதையடுத்து, அவர் அய்யம்பேட்டை காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், நவம்பர் 20ஆம் தேதி தினேஷ்குமார் மனித உரிமைஆணையத்தில் நேரில் ஆஜா் ஆக வேண்டும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அவர் அங்கு செல்லாமல், அன்றைய தினம் அய்யம்பேட்டை காவல்நிலையத்தில் பணிக்கு சோ்ந்தார். இதனால் அவர்மீது மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனம்உடைந்த தினேஷ்குமார், கடந்த (20.11.2020 ரோந்து பணியில் இருக்கும் போது சாலையின் ஓரத்தில் வாந்தி எடுத்து கொண்டிருந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர், அவரை, அழைத்து சென்று வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளனா். அன்று இரவே அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தஞ்சை மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவர் எலி மருந்து சாப்பிட்டது தெரிய வந்தது. இதனால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு (22.11.2020) உயிரிழந்தார்.
இவரது தற்கொலைக்கு ஜாதிய ரீதியிலான நடவடிக்கை என மனித உரிமை ஆணையத்தின் கெடுபிடி மற்றும், குழந்தை பாக்கியம் கிட்டாத நிகழ்வு என்று கூறப்படுகிறது.