டெல்லி: டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் . அதன்படி 70 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
70 சட்டமன்ற தொகுதிகளைக்கொண்ட டெல்லி மாநில சட்டமன்றத்தின் ஆயுட்காலம் பிப்ரவரி 15ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த ஆட்சி அமைப்பதற்கான தேர்தல் தேதிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்துள்ளார்.
அதன்படி, டெல்லியில் ஒரே கட்டமாக பிப்ரவரி 5ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, பிப்ரவரி 8ந்தேதிவாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் தொடக்கம்: ஜனவரி 10ந்தேதி (வெள்ளிக்கிழமை)
வேட்புமனு தாக்கல் கடைசி நாள் : ஜனவரி 17ந்தேதி (வெள்ளிக்கிழமை)
வேட்புமனு பரிசீலனை : ஜனவரி 18ந்தேதி (சனிக்கிழமை)
வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள்: ஜனவரி 20ந்தேதி (திங்கட்கிழமை)
வாக்குப்பதிவு நாள்: பிப்ரவரி 5ந்தேதி (புதன்கிழமை)
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்: பிப்ரவரி 8ந்தேதி (சனிக்கிழமை)
தேர்தல் நடதை விதிகள் முடிவுக்கு வரும் நாள் பிப்ரவரி 10ந்தேதி.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல்ஆணையர் ராஜிவ்குமார், இது எனது கடைசி செய்தியாளர் சந்திப்பு என்று கூறியதுன்,”EVM-ல் நம்பகத்தன்மை இல்லாததற்கான ஆதாரம் அல்லது குறைபாடுகள் எதுவும் இல்லை. என்று கூறியதுடன், EVM-ல் வைரஸ் அல்லது பிழையைப் புகுத்துவது பற்றிய கேள்வியே இல்லை. EVM-ல் செல்லாத வாக்குகள் பற்றிய கேள்வியே இல்லை. மோசடி இல்லை. உச்ச நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் வெவ்வேறு தீர்ப்புகளில் இதைத் தொடர்ந்து கூறுகின்றன தேர்தல் நடக்கும் போது பேசாத காரணத்தால் தான் இப்போது பேசுகிறோம்” அதனால், வாக்களிப்பதை மாற்றுவது சாத்தியமில்லை என்று கூறினார்.
மேலும், “இந்திய வாக்காளர்கள் மிகவும் விழிப்புணர்வோடு இருக்கிறார்கள்… இப்போதும் வாக்காளர் பட்டியல் குறித்து கதைகள் உலவுகின்றன. ஏறக்குறைய 70 படிகள் உள்ளன… அதில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் எங்களுடன் இருக்கிறார்கள்… வரும் அனைத்து உரிமைகோரல்களும் எதிர்ப்புகளும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பகிர்ந்து கொள்ளப்பட்டது, படிவம் 7 இல்லாமல் எந்த நீக்கமும் செய்ய முடியாது என்று தெரிவித்தார்.