டெல்லி: முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்க  சிபிஐ, அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி,  மனுவுக்கு சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு  உத்தரவிட்டுள் வழக்கை ஒத்தி வைத்ததது.

கலால் கொள்கை வழக்கில், டெல்லியை ஆட்சி செய்து வரும் முதல்வர் கெஜ்ரிவால், முன்னாள் ன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். முன்னதாக மணிஷ் சிசோடியாமீது சிபிஐ வழக்கு பதிவு செய்து, கடந்த பிப். 26ஆம் தேதி கைது செய்தது. அதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 9 அன்று பணமோசடி வழக்கில் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத் சிசோடியா  திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இது பாஜகவின் வஞ்சகமான செயல் என்று ஆம்ஆத்மி கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

இதற்கிடையில், தன்மிதான ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் இருந்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி மணீஷ் சிசோடியா தரப்பில்  டெல்லி  ரோஸ் அவென்யூ கோர்டில்  மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் மீதான விசாரணை ஏப்ரல் 30ந்தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது, ஜாமின வழங்குவதற்கான சூழல் இல்லை என கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, சிசோடியா தரப்பில்,  டெல்லி உயர் நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.