டெல்லி: ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கிய 2500 கோடி ரூபாய் மதிப்பிலான கப்பல் கட்டும் ஒப்பந்தத்தை ரத்த செய்து இந்திய கடற்படை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கடற்படைக்கு ரோந்து கப்பல்கள் கட்டுவதற்கான  ரூ .2500 கோடி ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகம் ரத்து செய்வதாக தெரிவித்து உள்ளது.

 அனில் அம்பானியில் ரிலையன்ஸ் குழுமல் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால், மோடி அரசு ரூ. 58,000 கோடி ரஃபேல் ஜெட் விமானப்படை ஒப்பந்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கியது. அதுபோல கப்பல் கட்டுவது தொடர்பான சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

கடந்த 2011ம் ஆண்டு 5 பேர்க் கப்பல்களை கட்ட ஒப்பந்தம் பெற்றது அனில்அம்பானியின் ரிலையன்ஸ். 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அசல் ஒப்பந்தத்தை பிபாவவ் பாதுகாப்பு மற்றும் கடல்சார் பொறியியல் நிறுவனம் வென்றது. ஆனால், 2016ம் ஆண்டு இந்த நிறுவனம் அனில் அம்பானி குழுவினரால் வாங்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்கவில்லை என்று கூறி 2 கப்பல்கள் கட்டுவதற்கான அனுமதி மற்றும் ஒப்பந்தததை பாதுகாப்பு அமைச்சகம் ரத்து செய்துள்ளது.

 ரிலையன்ஸ் நேவல் மற்றும் என்ஜினியரிங் நிறுவனத்திற்கு வழங்கிய 2500 கோடி அளவிலான கடலோர ரோந்து கப்பல் கட்டும் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது கடற்படை.கப்பல் கட்டுவதில் ஏற்பட்ட கால தாமதத்தால் தான் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது குறித்து எந்த கருத்தும் இதுவரை ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை.