கான்பெரா, ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் கருத்தை ஆஸ்திரேலிய ராணுவ தளபதி அனைவர் முன்னிலையிலும் மறுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டோபர் பைன். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டு பேசி உள்ளார். அந்த நிகழ்வில் ஆஸ்திரேலிய நாட்டு பாதுகாப்புப் படைதலைவரும் ராணுவ தளபதியுமான ஆங்கஸ் காம்பெல் கலந்துக் கொண்டுள்ளார்.
நிகழ்வில் கிறிஸ்டோபர் பைன் அரசியல் காரணங்களால் பாதுகாப்புப் படை சரிவர செயல்படாத நிலையில் உள்ளது என்னும் கருத்துப் பட பேசி உள்ளார். இதற்கு அந்த நிகழ்வு மேடையிலேயே ஆங்கஸ் காம்பெல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கிறிஸ்டோபரின் பேச்சை மேடையிலேயே திருத்தியதுடன் ஆங்கஸ் காம்பெல் அரசியல் விவகாரங்களை ராணுவ நிகழ்வில் பேசுவது தவறு எனவும் ராணுவ விவகாரங்களில் அரசியல் கூடாது எனவும் அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/CUhlmann/status/1111065857851969536