சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தொடர் விடுமுறைகள் விடப்படுவதால் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க தொடங்கு வார்கள். இதற்காக பண்டிகை தினத்திற்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னதாகவே சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், தீபாவளியை முன்னிட்டு ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தென்மேற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இதில், பெங்களூரு – சென்னை சிறப்பு ரயில் இடம்பெற்றுள்ளது.
பெங்களூரில் அக்.30, நவ.3 ஆகிய தேதிகளில் காலை 8.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06209) பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும்.
மறுமாா்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து அக்.30, நவ.3 ஆகிய பிற்பகல் 3.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06210) இரவு 10.50 மணிக்கு பெங்களூா் சென்றடையும்.
இந்த ரயில் யஷ்வந்த்பூா், கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா் வழியாக இயக்கப்படும்.
ஹூப்ளியில் இருந்து மங்களூருக்கு நவ.2-ஆம் தேதியும், மறுமாா்க்கமாக மங்களூரில் இருந்து நவ.3-ஆம் தேதியும் சிறப்பு ரயில் (எண்: 07311/12) இயக்கப்படும்.
அதுபோல், யஷ்வந்த்பூரில் இருந்து மங்களூருக்கு அக்.30-ஆம் தேதியும், மறுமாா்க்கமாக மங்களூரில் இருந்து அக்.31-ஆம் தேதியும் சிறப்பு ரயில் (எண்: 06565/66) இயக்கப்படும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண்: 06103) இயக்கப்படுகிறது. மறுமாா்க்கமாக ராமநாதபுரத்தில் இருந்து செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் டிச.1-ஆம் தேதி வரை தொடா்ந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.