சென்னை: தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23ந்தேதி வாக்குப் பதிவு தினத்தன்று பொதுவிடுமுறை விடுங்கள் என இந்திய தேர்தல் ஆணையம்  தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்தல் வாக்குப் பதிவு நடை​பெறும் ஏப்​.23-ம் தேதி அரசு மற்​றும் தனி​யார் நிறு​வனங்​களுக்கு பொது விடு​முறை விட வேண்​டும் என்று தமிழக அரசுக்​கு, தேர்தல் ஆணை​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வைக்​கான தேர்தல் வாக்​குப்​ப​திவு வரும் ஏப்​.23-ம் தேதி நடை​பெறுகிறது. இந்த தேர்​தலில் 2.90 கோடி பெண், 2.78 கோடி ஆண், 7,656 திருநங்​கைகள் என மொத்​தம் 5.69 கோடி வாக்​காளர்​கள் வாக்​களிக்க உள்​ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல்  ஏப்ரல் 23ந்தேதி நடைபெறுகிறது.. அதற்கான ஏற்பாடுகளை  தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக  தமிழ்நாட்டில்  அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.  இந்​த நிலை​யில், தமிழகம் முழு​வதும் உள்ள அனைத்து அரசு, பொதுத்​துறை மற்​றும் தனி​யார் நிறு​வனங்​கள், அனைத்து கல்வி நிறு​வனங்​கள், தொழிற்​சாலைகள் ஆகிய​வற்​றுக்கு ஏப்​.23-ம் தேதி சம்​பளத்துடன் கூடிய பொது விடுமுறை விட வேண்​டும்.

தொழிலா​ளர் பணி​யாற்​றும் தொகு​தி​யில் தேர்தல் நடை​பெறா​விட்​டாலும், தேர்தல் நடை​பெறும் தொகு​தி​யில், அந்த தொழிலாளி வாக்​காள​ராக இருந்​தால் அவர்​களுக்கு சம்​பளத்​துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்​டும். தினக்​கூலி தொழிலாள​ராக இருந்​தா​லும் விடுப்பு அளிக்க வேண்​டும்/

இவ்வாறு தமிழக அரசுக்​கு, இந்​திய தேர்தல் ஆணை​யம் அறி​வுறுத்​தி ​உள்​ளது

[youtube-feed feed=1]