Accenture நிறுவனத்தின் சைபர் நுண்ணறிவு குழு மேற்கொண்ட ஆய்வில், நிறுவனங்களை ஹேக் செய்வது வெளியில் இருந்து வரும் ஹேக்கர்கள் மட்டும் இல்லை, நிறுவனத்துக்குள்ளே வேலை பாக்குற சில பேரே ஹேக்கர்களோட சேர்ந்து உள்ளடி வேலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை கண்டுபிடித்துள்ளது.

வேலை இழப்புகள், குடும்ப செலவினங்கள் அதிகரிப்பு மாதிரி பிரச்சனைகளால் சில ஊழியர்கள் அடையாளம் மறைக்கப்பட்ட, வெளியில் தெரியாத டார்க் வெப் இணையதளங்களுக்கு, தங்களிடம் உள்ள கம்பெனி தகவல், லாகின் ஐடி, அணுகல் (access) மாதிரியான விஷயங்களை ஹேக்கர்களுக்கு விற்க முயற்சி மேற்கொள்வது தெரியவந்துள்ளது.

பொதுவா கம்பெனிகள் சைபர் பாதுகாப்பு சொன்னா வெளியிலிருந்து வரும் தாக்குதல்களையே கவனிக்கிறாங்க. ஆனா இப்போ அபாயம் கம்பெனிக்குள்ள இருந்தே வர ஆரம்பிச்சிருக்குன்னு நிபுணர்கள் எச்சரிக்குறாங்க.

Accenture தரவுகள்படி:

2025-ல், 2024-ஐ ஒப்பிடும்போது ஹேக்கர்களுக்கு கம்பெனி access விற்க முன்வரும் உள் நபர்கள் 69% அதிகரித்திருக்கிறார்கள்.

2022-ஐ ஒப்பிடும்போது ஹேக்கர்கள் உள் நபர்களை டார்க் வெப் மூலம் ஆட்சேர்ப்பு செய்வது 127% உயர்ந்திருக்கிறது.

ஹேக்கர்களுக்கு மிகவும் முக்கியமானது, ஒரு கம்பெனிக்குள்ளே முதல் access கிடைக்க வேண்டும். அந்த லாகின் விவரங்களே சுமார் 30% சைபர் தாக்குதல்களில் முக்கிய காரணம் ஆக இருக்கிறது.

இந்த எண்ணிக்கைகள் ரொம்ப கவலைக்கிடமானது என்று Accenture நிறுவனத்தின் உலகளாவிய சைபர் நுண்ணறிவு பிரிவு தலைவர் Ryan Whelan தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் இதுபோன்ற பிரச்சனை பெரும்பாலும் நிதி நிறுவனங்கள், கிரிப்டோ துறை, அரசு அமைப்புகள் போன்ற இடங்களில் அதிகமா இருந்தது. ஆனால் தற்போது உற்பத்தித் துறை, லாஜிஸ்டிக்ஸ், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்டவையும் பாதிக்கப்பட ஆரம்பித்துள்ளது.

இதனை சமாளிக்க, வேலைக்கு ஆட்களை சேர்க்கும் முன்பு அவர்களது அடையாளங்களை முழுவதுமாக சரிபார்ப்பதுடன் access கட்டுப்பாடு, கண்காணிப்பு தொடர வேண்டும் என்றும் அவர்கள் வேலையே விட்டு விலகிய உடன் லாகின் உள்ளிட்ட அணுகலை தடை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், ஊழியர்களுடனான நல்லுறவை மேம்படுத்துதல் முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மொத்தத்தில், ஹேக்கர்கள் வெளியிலிருந்து சிஸ்டத்தை உடைக்க முயற்சி செய்வதை விட, கம்பெனிக்குள்ளே இருக்கும் உள் நபர்களை பயன்படுத்தி உள்ளடி வேலை செய்வது தான் எளிதான வழி என்று நினைத்து செயல்படுவது இந்த ஆய்வில் வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் ஐடி நிறுவனங்கள் பதற்றம் அடைந்துள்ளன.

[youtube-feed feed=1]