மும்பை: ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பதவி ஏற்ற பிறகு, நிதிக்கொள்கை  கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி,  இரண்டாவது முறையாக ரெப்போ வட்டி விகிதம்  0.25% குறைத்து அறிவித்து உள்ளார். ஏற்கனவே கடந்த பிப்ரவரியில் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு (MPC) புதன்கிழமை ரெப்போ விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து, 6.25% இலிருந்து 6.0% ஆகக் குறைத்தது.  3 e நாட்கள் நடைபெற்ற ஆறு பேர் கொண்ட குழுவின் நிதிக்கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இந்த முடிவை அறிவித்தார்.

மும்பையில் இந்திய ரிசர்வ் வங்கி 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதி கொள்கை கூட்டம் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது.  இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை இன்று செய்தியாளர்களிடம்   ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா  அறிவித்தார். இதன்மூலம்,  5 ஆண்டுகளுக்குப் பின்னர் ரெப்போ வட்டி விகிதம் குறைந்தது.

முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் வரை 6 முறை ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யாமல் அதற்கும் முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரச் செய்தது இந்த நிலையில்,   கட்டண சவால்களுக்கு மத்தியில், ரிசர்வ் வங்கி 25-26 நிதியாண்டில் வளர்ச்சி எதிர்பார்ப்புகளை 6.7% இலிருந்து 6.5% ஆக திருத்தியுள்ளது.

இந்தியாவில் பணவீக்கம் குறைந்து பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதால், ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான நிதி கொள்கை ஆணையம், ரெப்போ விகிதத்தைக் குறைப்பதாகத் தெரிவித்திருக்கிறது.  அதாவது,  ரெப்போ வட்டி விகிதம் கடந்த ஓராண்டாக 6.7% ஆக தொடர்ந்து வந்த நிலையில், அதை 6.5% ஆக குறைத்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கடைசி கொள்கை கூட்டத்தில், 5 ஆண்டுகளுக்குப் பின்னர் ரெப்போ விகிதத்தை 6.5 சதவிகிதத்திலிருந்து 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்திருந்தனர். மேலும், 2 மாத இடைவெளியில் மீண்டும் 0.25 சதவிகிதம் குறைப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

.ஜனவரி-பிப்ரவரி 2025 காலகட்டத்தில் பிரதான பணவீக்கம் மிதமானது. உணவுப் பணவீக்கத்தில் ஏற்பட்ட கூர்மையான திருத்தத்தைத் தொடர்ந்து, உணவுப் பணவீக்கத்திற்கான எதிர்பார்ப்பு தீர்க்கமாக நேர்மறையாக மாறியுள்ளது..

2025-26 நிதியாண்டிற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) பணவீக்கம் 4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, முதல் காலாண்டு 3.6 சதவீதமாகவும், இரண்டாவது காலாண்டு 3.9 சதவீதமாகவும், மூன்றாவது காலாண்டு 3.8 சதவீதமாகவும், நான்காவது காலாண்டு 4.4 சதவீதமாகவும் இருக்கும்” என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகிறார்.

பணவீக்கம் குறைவது மற்றும் பொருளாதார வளர்ச்சி குறைவதற்கான அறிகுறிகளுக்கு மத்தியில் ரெப்போ விகிதத்தில் மேலும் 0.25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம்0.25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6% ஆக குறைக்கப்பட்டது. இதனால், வீடு மற்றும் வாகன கடன்களுக் கான வட்டி குறையும். பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் மத்திய வங்கி தேவையைக் கூட்டவும் முதலீட்டைப் பெருக்கவும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு பின் கடந்த பிப்ரவரியில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது

இந்த ரெட்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால், வங்கிகள் மக்களுக்கு அளிக்கும் கடன்கள் மீதான வட்டி விகிதம் குறையும். ஏற்கனவே கடன் பெற்று இஎம்ஐ செலுத்தி வரும் மக்களுக்கு மாதத் தவணை தொகை குறையும். மக்களிடம் சற்று பணம் இருக்கும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.