பாலிவுட்டில் பிரபல டிவி சேனலில் நடிகையாகவும் பாடகியாகவும் ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர் திவ்யா சௌக்ஸி.
நேற்று இவர் கேன்சர் நோயால் காலமாகியிருப்பது குறித்து திவ்யாவின் உறவினரான அமிஷ் வர்மா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
மேலும் திவ்யா காலமாகும் முன்னர், தனது ரசிகர்களுக்கு ஒரு எமோஷனல் பதிவை விட்டு சென்றுள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், ”நான் சொல்ல நினைப்பதற்கு, வார்த்தைகள் போதாது. பல மாதங்களாக எனக்கு தொடர்ந்து ஆறுதல் மெசேஜ்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இப்போது நான் இதை சொல்ல வேண்டிய நேரம். நான் என் மரண படுக்கையில் இருக்கிறேன். நான் வலிமையாகதான் இருக்கிறேன். இந்த கஷ்டங்கள் இல்லாமல் இன்னொரு வாழ்க்கை கிடைக்கட்டும். Bye” என எமோஷனலாக பதிவிட்டுள்ளார். இவரின் இந்த திடீர் மறைவுக்கு ரசிகர்களும் திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

[youtube-feed feed=1]