மும்பை:
பிரதமர் மோடியை பாராட்டிய மகாராஷ்டிரா மாநில கம்யூனிஸ்டு தலைவரை, கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு இடைநீக்கம் செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மாநில மார்க்சிய கம்யூ னிஸ்டு முன்னாள் எம்எல்ஏவான நரசையா ஆதாம், பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா மாநில முதல்வரை, சோலாப்பூர் தொகுதியில் நடைபெற்றும் வீடு கட்டும் பணிகள் குறித்து பாராட்டி பேசினார்.
பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்றும் கூறினார். இது கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று கூறி, மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு நரசையாவை கட்சியில் இருந்து நீக்கி உள்ளது.
இதுகுறித்து 3 மாதத்திற்குள் நரசையா விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.