டெல்லி: இந்தியாவில், கொரோனா 2வது அலை ஜூலை மாதத்தில் முடிவடையும்  என்றும், அடுத்த 6 மாதங்களில்  மூன்றாம் அலை தொடங்க வாய்ப்பு உள்ளதாக, மத்திய வல்லுநர் குழு தகவல்  தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா 2 ஆம் அலை  பரவல் வட மாநிலங்களில் குறையத்தொடங்கி உள்ளது. ஆனால், தமிழகம், கேரளா உள்பட தென் மாநிங்களில் தீவிரமடைந்து உள்ளது.

இந்த நிலையில்,இந்தியாவில் கொரோனா பரவலின் நிலை குறித்தும்,அதனை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனைகளை வழங்கவும் மத்திய அரசு மூன்று ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது.

இந்த குழு சூத்ரா – SUTRA (Susceptible, Undetected, Tested (positive) and Removed Approach) என்ற முறையின் அடிப்படையில் தற்போது,கொரோனா 3 ஆம் அலை பற்றிய கணிப்புகளை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது.

அதன்படி, இந்தியாவில் மே மாத இறுதியில் ஒரு நாளைக்கு சுமார் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று இருக்கும் என்றும்,ஆனால், ஜூன் மாத இறுதியில் தினசரி கொரோனா பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 20,000 ஆக குறையும் என்று கணிக்கப்பட்டுஉள்ளது.

குறிப்பாக,தமிழ்நாட்டில் வரும் மே 29 முதல் 31 ஆம் தேதி வரையிலும், புதுச்சேரியில் 19 முதல் 20 வரையிலான தேதிகளிலும் கொரோனா உச்சமடையும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும்,கொரோனா பரவலின் 3 ஆம் இலை இன்னும் 6 முதல் 8 மாதங்களில் நாட்டில் ஏற்படலாம் என்றும்,இருப்பினும்,அதிக பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் என்பதால் பெரும் பாதிப்பு ஏற்படாது என்றும் மத்திய அரசின் வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.