லண்டன்: அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி விநியோகிப்பதற்கான திட்டங்களை இங்கிலாந்து விரைவில் அறிவிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் தினத்தன்றும், அதற்கு அடுத்த நாளும், மருத்துவர்கள் மூலம் தடுப்பூசி விநியோகிக்கப்படும் என்று அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வாரத்தில் ஏழு நாட்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கொரோனா தடுப்பூசி வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. தடுப்பூசி விநியோகத்தை விரைவுபடுத்த முக்கிய நகரங்களில் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படும் என்று நம்பப்படுகிறது. மருத்துவர்களுக்கு உதவிடும் வகையில் 3000 நடமாடும் குழுக்களும் ஈடுபடுத்தப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.