நொய்டா:

ந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, டெல்லிக்கு அருகில் உள்ளதும், உ.பி.யின்  தொழில் நகரமான  நொய்டாவில் 144 தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அங்கு அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை செய்யப்பட்டு உள்ளது.

இந்த பகுதியில் ஏற்கனவே 4 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி உறுதி செய்யப்பட்ட நிலையில்,  , நொய்டா நிர்வாகம் இப்பகுதியில் பிரிவு 144 ஐ விதித்துள்ளது.

அதன்படி இன்றுமுதல் ஏப்ரல் 5 வரை மாவட்டத்தில் சமூக, அரசியல், கலாச்சார, மத, விளையாட்டு மற்றும் வணிக நடவடிக்கைகள் எதுவும் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நொய்டா நகர போலீஸ் கமிஷனர் இப்பகுதியில் பிரிவு 144 ஐ விதித்துள்ளார்.  பிரிவு -144 அமல்படுத்தப்பட்ட பின்னர், நான்கு பேருக்கு மேல் ஒரே இடத்தில் செல்லக்கூடாது. இதன் மூலம், ஏப்ரல் 5 வரை மாவட்டத்தில் நொய்டா, கிரேட்டர் நொய்டா, தாத்ரி போன்ற இடங்களில்  சமூக, அரசியல், கலாச்சார, மத, விளையாட்டு மற்றும் வணிக நடவடிக்கைகள் எதுவும் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் முதன்முதலாக நொய்டா பகுதிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.