புதுச்சேரி:
புதுச்சேரியில் அனைத்து வகை மதுபானங்கள் மீதான கொரோனா வரி மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு காரணமாாக பல மாநிலங்களில் வருவாய் இழப்பு ஏற்பட்டதால் நாடு முழுவதிலும் சில மாநிலங்கள் தங்களின் வரி வருவாயை பெருக்கி கொள்ள மதுகடைகளை திறந்துள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா வரி விதிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டைவிட புதுச்சேரியில் மதுபானங்களின் விலை அதிகமாகியுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி காவல்துறை துணை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் அனைத்து வகை மதுபானங்கள் மீதான கொரோனா வரி மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும், கொரோனா வரியை மார்ச் 31 வரை நீட்டித்து ஆளுநர் உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.