சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அமைச்சர் மற்றும் அதிகாரி களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் நேற்று நடத்தப்பட்ட 13,180 பரிசோதனையில் 121ஆண்கள் 98பெண்கள் என மொத்தம் 219 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக  சென்னையில் 129, செங்கல்பட்டில் 41 திருவள்ளூரில் 11 மற்றும் காஞ்சிபுரத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனால் மொத்த பாதிப்பு 34,56,916-ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, முகக் கவசம், தனி நபா் இடைவெளி உள்ளிட்ட நோய்த் தடுப்பு வழிமுறைகளை பொது மக்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்யுமாறும் பரிசோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் அனைத்து மாவட்ட நிா்வாகங்களுக்கும் மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் இன்று சனிக் கிழமை காலை 10,.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். இதில், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பிற துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர்.