சென்னை
மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 3077 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 10,825 பேர் உயிர் இழந்து 6,55,170 பேர் குணம் அடைந்து தற்போது 34,198 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இதுவரை சென்னையில் 1,93,299 பேர் பாதிக்கப்பட்டு 3,569 பேர் உயிர் இழந்து 1,78,623 பேர் குணம் அடைந்து தற்போது 11107 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 42,063 பேர் பாதிக்கப்பட்டு 648 பேர் உயிர் இழந்து 39,900 பேர் குணம் அடைந்து தற்போது 1,515 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக கோவை மாவட்டத்தில் 40,982 பேர் பாதிக்கப்பட்டு 528 பேர் உயிர் இழந்து 36,701 பேர் குணம் அடைந்து தற்போது 3,569 பேர் சிகிச்சையில் உள்ளனர்.