சென்னை

சென்னை நகரில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகையில் தீபாவளி பர்சேஸ் கூட்டம் அதிகரித்துள்ளது.

சென்னை நகரில் கொரோனா பாதிப்பு இன்று 585 ஆகவும் குணமடைந்தோர் எண்ணிக்கை 589 ஆகவும் உள்ளது,

தற்போது சிகிச்சையில் உள்ளோர் விகிதம் 2.8% ஆகக் குறைந்துள்ளது.

சென்னை மாநகராட்சி கொரோனா பரிசோதனைகளைக் குறைக்காமல் உள்ளன.

இதே அளவு பரிசோதனை நீடித்தால் சென்னையில் மீண்டும் கொரோனா  பாதிப்பு உண்டாக வாய்ப்புக்கள் குறைவு என கூறப்படுகிறது.

ஆனால் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பொருட்களை வாங்கக் கூடுகின்றனர்

இதனால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மக்கள் இதை உணர்ந்து பொறுப்புடன் தீபாவளி நேரத்தில் நடந்துக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.