டெல்லி: பாஜகவுக்கு அஞ்சும் காங்கிரஸ்காரர்கள், ஆர்எஸ்எஸ் கருத்தியலை நம்புபவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு தேவையில்லை, அவர்களுக்கு கதவு திறந்தே இருக்கிறது என காங்கிரஸ் ராகுல் காந்தி ஆவேசமாக கூறினார்.

நாடு முழுவதும் இருந்து 3,500 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக தொண்டர்களிடம் காணொளி காட்சி மூலம் நெற்று உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை (ஜூலை 16) அவர்கள் அச்சமின்றி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

காங்கிரஸ் கட்சியில் இல்லாத பெரும்பாலான மக்கள் அச்சம் இல்லாமல் இருக்கின்றனர். அவ்வாறு  அச்சமில்லாதவர்களை காங்கிரஸ் கட்சிக்கு கொண்டு வரவேண்டும். பாஜகவுக்காக அச்சப்படும் காங்கிரஸ்காரர்கள், ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்தம் கொண்டவர்கள் காங்கிரஸ் கட்சிக்குத் தேவையில்லை. அவர்கள் வெளியேறும் வழியைப் பார்க்கலாம்..  அவர்கள் வெளியேற கதவு திறந்தே உள்ளது என ராகுல் காந்தி ஆவேசமாக கூறியுள்ளார்.

காந்திய கொள்கை மீது நம்பிக்கையுடையவர்கள் மட்டுமே நமக்கு தேவை. அவர்களுக்காகவே நமது கட்சி செயல்படுகிறது. கட்சியின் கொள்கையில் இருந்து விலகிச் செல்ல விரும்புபவர்கள் கட்சியில் இருக்கத் தேவையில்லை. . எங்களுக்கு அச்சமற்ற மக்கள் தேவை.

பிரதான ஊடகங்களின் குரலை அரசாங்கம் கட்டுப்படுத்துவதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, கட்சியின் சமூக ஊடக தன்னார்வலர்களை அதிக மக்களை ஈடுபடுத்துமாறு அவர்களை  கேட்டுக் கொண்டார், இதனால் அவர்களைத் தடுக்க அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது.

“சமூக ஊடகக் குழு மற்றும் அவர்களது குடும்பங்களின் நல்வாழ்வு குறித்தும் காந்தி மிகவும் அக்கறையுடன் பேசிய ராகுல்,  தனக்கும் சமூக ஊடகத் தொண்டர்களுக்கும் இடையில் இதுபோன்ற சந்திப்புகள் ஒவ்வொரு மாதத்திற்கும் அல்லது இரண்டுக்கும் ஒரு முறை நடக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறினார்.

ராகுலின்  இந்த பேச்சு கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.