க்னோ

க்களவை தேர்தலில் காங்கிரஸ் யாரும் எதிர்பாராத அளவு வெற்றி பெறும் என லக்னோவில் காங்கிரஸ் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்த பிறகு பல பத்திரிகைகளில் அந்தக் கூட்டணிக்கு அதிக இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.    அத்துடன் பாஜகவுக்கு எதிராக அந்தக் கூட்டணி களமிறங்கி உள்ளதால் காங்கிரசுக்கு அதிகம் வெற்றி வாய்ப்பு இருக்காது எனவும் அந்த கூட்டணிகட்சி தலைவர்கள் கூறி உள்ளனர்.

ஆனால் உத்திரப்பிரதேச மாநில காங்கிரஸ் தொண்டர்களின் மன நிலை இதற்கு மாறாக உள்ளது.   மாநில தலைநகர் லக்னோவில் அமைந்துள்ள காங்கிரஸ் அலுலகமான நேரு பவனில் ஏராளமான தொண்டர்கள் கூட்டம்  காணப்படுகிறது.  இந்த பத்திரிகை செய்திகளை தொண்டர்கள் நம்பவில்லை என்பது தெளிவாகி உள்ளது.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அகிலேஷ் பிரதாப் சிங், “சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய இரு கட்சிகளுமே மாநிலக் கட்சிகள் ஆகும்.  ஆகவே அதிக இடங்களில் வென்றாலும் தேசிய அளவில் ஆட்சி அமைக்க அவர்களுக்கு காங்கிரஸ் உதவி தேவைப்படும் என்பதை மக்கள் அறிவார்கள்.

மக்களவை தேர்தலைப் பொறுத்தவரை உத்திரப் பிரதேச வாக்காளர்கள் தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்கவே விரும்புவார்கள்.   எனவே கடுமையான பிரசாரத்தின் மூலம் காங்கிரஸ் மக்கள் ஆதரவை  மீண்டும் பெற முடியும் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு.

உண்மையில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைந்தது காங்கிரசுக்கு ஒரு நிம்மதியை அளித்துள்ளது.    தனித்து  போட்டியிடுவதன் மூலம் காங்கிரஸ் அதிக இடங்களில் போட்டியிட முடியும் எனவும் அனைத்து இடங்களிலும் வெற்றி  அடையும் என்பதிலும் தொண்டர்களுக்கு நம்பிக்கை உள்ளது. ” என தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைமையகத்தில் கூடி இருந்த தொண்டர்கள் கூட்டத்தில் இருந்த ஒருவர் அங்கிருந்த செய்தியாளரிடம், “நாடெங்கும் ராகுல் காந்தி சமீபத்தில் நடத்திய தேர்தல் பிரசாரத்தின் விளைவாக பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.   எனவே  யாரும் எதிர்பாராத அளவு வெற்றி பெற்று காங்கிரஸ் நிச்சயம் ஆட்சி அமைக்கும்” என தெரிவித்துள்ளார்.