புதுடெல்லி:
ஏப்ரல் 2 முதல் 4 வரை நாடு தழுவிய போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரன்தீப் சுர்ஜேவாலா, எரிபொருள் மற்றும் சமையல் சிலிண்டர் விலையுயர்வை க்ண்டுத்து காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டம் ஏப்ரல் 2 முதல் 4 வரை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் பாத்திரங்களை தட்டி எழுப்பி போராட்டம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது என்று தெரிவித்தார்.