ராஞ்சி

காங்கிரஸ் கட்சி ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஜார்கண்ட் மாநில சட்டசபையின் பதவிக்காலம் நிறைவு பெற உள்ளதால் அங்கு புதிய அரசை தேர்வு செய்ய சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டங்களாகநவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெரும் இந்தியா கூட்டணி ஆட்சியில் முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார். இக்கு ஆட்சியை பிடிக்க பாஜக முய்ளூ நிலையில் ஆட்சியை தக்க வைக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணி வியூகம் வகுத்து வருகிறது.

மொத்தம்  70 தொகுதிகளில் இந்தியா கூட்டணியில் ஜார்க்கண்ட் முத்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் போட்டியிடும் என உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.   கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது., காங்கிரஸ் கட்சி நேற்றி நள்ளிரவு முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது,