டெல்லி: மத்திய அரசானது லாபத்தை தனியார்மயமாக்குகிறது, இழப்பை தேசியமயம் ஆக்குகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார்.
வங்கிகள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் தனியார்மயாக்கல் கொள்கைக்கு எதிராக 9 வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான யுனைடெட் போரம் ஆப் பேங்க் யூனியன்ஸ் மார்ச் 15, 16ம் தேதிகளில் இரண்டு நாள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட அழைப்பு விடுத்திருந்தது.
அதனை தொடர்ந்து நாடு முழுவதும் இன்று வங்கிகள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைவர் இந்த போராட்டத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது: அரசு வங்கிகளை தனியாருக்கு மோடி தலைமையிலான மத்திய அரசு விற்று வருகிறது. லாபத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் மோடி நஷ்டத்தை தேசியமயமாக்கி வருகிறார். வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.