சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி அமைக்க தயாராக உள்ளது என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகைமறுப்பு தெரிவித்து உள்ளார்.
தவெகவுடன் ஒருமுறை கூட கூட்டணி பேசவில்லை என்றும், விரைவில் திமுக – காங்கிரஸ் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் திமுக மும்முரம் காட்டி வருகிறது. ஆனால், திமுக கூட்டணியில் உள்ள மிகப்பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சியை இதுவரை கூட்டணி குறித்து பேச திமுக தலைமை அழைப்பு விடுக்கவில்லை. இதனால், காங்கிரஸ் கட்சிக்கு எந்த தொகுதி என கட்சி நிர்வாகிகளிடையே ஆவல் மேலோங்கி உள்ளது. இதனால், விரைவில் பேசி முடிவு எடுக்க வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க தவெக தயாராக இருக்கிறது என்று கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே மாணிக்கம் தாக்கூர் உள்பட சிலர் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், மாநில அளவில் அதிகாரத்தில் பங்கு அதிகாரத்தை வேண்டாம் என்று எந்த கட்சி சொல்லும்? நாங்கள் ஒரு அரசு சாரா நிறுவனத்தை நடத்தவில்லை, ஒரு அரசியல் கட்சியை நடத்துகிறோம். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அதன் சொந்த விருப்பங்கள் உள்ளன என்று தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி அமைக்க தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.
இது இரு கட்சிகளிடையே மேலும் விரிசலை உருவாக்கி உள்ளது. இதையடுத்து, இன்று திமுக எம்.பி. கனிமொழி அவசரமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் சிலரை சந்திப்பார் என கூறப்படுகிறது.
இந்தநிலையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று மறுப்பு தெரிவித்ததுடன், அதிமுக-வுடன் கூட்டணி பேச தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
[youtube-feed feed=1]