டெல்லி: எங்கள் தேர்தல் அறிக்கையை திரித்து தவறான தகவல்களை பரப்பி,  மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது பாஜக என காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து மக்கள் மத்தியில் குழப்பத்தையும், அச்சத்தையும் பாஜக தொடர்ந்து பரப்பி வருவதாகவும், “சமூகத்தின் சமமான வளர்ச்சி குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்களால் சம்பளம் பெறும் தொழில் வல்லுநர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடையே குழப்பத்தையும் கோபத்தையும் பாஜக பரப்புகிறது”  தவறான தகவல்களை பரப்பிய ஆளுங்கட்சி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி நேற்று ( செவ்வாய்க்கிழமை) புகார் அளித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி ‘நியாய பத்ரா’ (நீதிக்கான ஆவணம்) என்ற பெயரில்  ஏப்ரல் 4ந்தேதி டெல்லியில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. ‘வோர்க், வெல்த், வெல்ஃபேர்’ (work, wealth, welfare) என்பதுதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முழக்கம் என கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்தார்.

காங்கிரஸ் கட்சி மக்களிடம் கொல்லையடித்து, அவர்களின் செல்வங்களை மோசடி செய்வோருக்கு வாரி வழங்கியதாக குற்றம்சாட்டியதுடன்,  நமது நாட்டின்  ‘தாய் மற்றும் சகோதரிகளின் தங்கத்தை எடுத்து நாட்டுக்குள் ஊடுருவியவர்களுக்கு விநியோகம் செய்ய’ காங்கிரஸ் விரும்புவதாக மோதி கூறினார். ஊடுருவியர்கள் என்று பிரதமர் கூறியது இஸ்லாமியர்களைத்தான் என  காங்கிரஸ் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி, கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுமீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக் கப்பட்டுள்ளது. மனுவில்,  ”தேர்தல் அறிக்கை மட்டுன்றி சமூகத்தின் சமமான வளர்ச்சி குறித்த ராகுல் காந்தியின் பேச்சை திரித்தும் மக்கள் மத்தியில் தவறான தகவல்களை பாஜக பரப்புகிறது. இந்த பொய்யான கருத்துக்களால் ஊதியம் பெறுவோர், நடுத்தர வர்க்கத்தினரிடையே காங்கிரஸ் கட்சிக்கு எதிரான குழப்பத்தையும், கோபத்தையும் பாஜக திட்டமிட்டு பரப்புகிறது” என்று  கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பணியாளர்கள் அமைப்பின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி , “காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் உங்கள் வருமானம் மற்றும் சொத்துக்களில் ஒரு கண் வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் தலைமையிலான அரசு மத்தியில் அமைந்தால், உங்களிடம் என்ன இருக்கிறது என்பதை ஆராய்வார்கள். அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, அந்த சொத்துக்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும். பின்னர் பகிர்ந்தளிக்கப்படும்” என்று நேற்றைய தினம் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார் என்பதை சுட்டிக்காட்டியதுடன்,   மக்களின் ‘சொத்துக்களை பறித்து’ மறுபங்கீடு செய்ய காங்கிரஸ் சதி செய்வதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆனால் ”நமது சமூகத்தின் மிகவும் சமமான வளர்ச்சியை உறுதி செய்வதற்கான பொருளாதார மற்றும் சமூக நீதிக்கான அர்ப்பணிப்பு’ குறித்து மட்டுமே ராகுல் காந்தி பேசினார். இதனையும் பாஜகவினர் திரித்துப் பரப்பி வருகின்றனர்” என்றவர்,  அரசியல் வதந்திகளுக்கு வசதியான வாட்ஸ் ஆப் மூலமாகவும் இந்த காங்கிரஸ் எதிர்ப்பு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஜவஹர்லால் நேரு பெயரிலான ’ஏழைகளுக்கு மறுபங்கீடு’ திட்டத்தின் கீழ், மக்கள் சொத்துக்களில் மூன்றில் இரண்டு பங்கை காங்கிரஸ் பறிமுதல் செய்யப்போவதாகவும், அந்த வாட்ஸ் அப் தகவல் பீதி கிளப்பி வருகிறது. இந்த சமூக ஊடக டிரெண்டிங் வதந்தி குறித்தும் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் இன்று முறையிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.