ஜெர்மனி: ஹிட்லரின் ஆட்சியில் நடந்த 10500 கொலைகளுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பபட்ட மைனர் வயது பெண்ணுக்கு, தற்போது அவரது 97 வயதில் 2ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

ஜெர்மனியில் 1933 முதல் 1945-ம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் ஹிட்லரின் சர்வாதிகார ஆட்டமே மேலோங்கி இருந்தது.  இவரது ஆட்சிக்காலத்தில் ஜெர்மனி உலகின் பெரிய பாசிச சக்தியாக உருவெடுத்தது. நாஜி கட்சியின் தலைவராக அவர் தனது நாஜி படைகளைக்கொண்டு நடத்திய போரில் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

நாஜி ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தில் 1943 முதல் 1945 இல் நாஜி ஆட்சி முடியும் வரை க்டான்ஸ்க்கு அருகிலுள்ள ஸ்டட்ஹாஃப் முகாமில், ஃபோர்ச்னர் என்ற மைனர் பெண் பணியாற்றினார். இதனால், அதுதொடர்பான குற்ற வழக்கில், அவரது பெயரும் சேர்க்கப்பட்டது.

இந்த  குற்றம் நடந்தபோது அந்தப் பெண் மைனராக இருந்ததால், அவர்மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில், இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது, ஃபோர்ச்னருக்கு 97வயதாகும் நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு இரண்டு ஆண்டுகளை தண்டனை விதிக்கப்படுவதாக தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த குற்றச்செயல்களின்போது அவர் மைனராக இருந்தால், அவர் சிறார் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.

நாஜி வதை முகாமில், 10,500 கொலைகளுக்கு உடந்தையாக  வதை முகாம் கமாண்டரிடம் செயலாளராக ஃபோர்ச்னர் பணியாற்றி யதாக கூறப்படுகிறது.

இந்த தீர்ப்புக்கான பின்னணியை பார்க்கலாம்..

ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியில் அரசியல் மற்றும் ராணுவ கைதிகளை அடைத்து வைப்பதற்காக பிரத்யேகமாக சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டு இந்த சிறைச்சாலைகள் சித்ரவதை கூடங்களாக செயல்பட்டன. நாஜி  வதை முகாம் என அழைக்கப்பட்ட இந்த சித்ரவதை கூடங்களில் ஆயிரக்கணக்கான கைதிகள் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த நாஜி சித்ரவதைக்கூடங்கள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இனஅழிப்பு படுகொலைக்கு காரணமாக இருந்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது 97 வயதான இம்கார்ட் ஃபியூஷ்னர் ஜெர்மனியின் ஸ்டுட்ஹாஃப் நகரில் இருந்த நாஜி வதை முகாமில் தனது மைனர் -வயதில் 1943 முதல் 1945 வரை தட்டச்சராக பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில், அடால்ஃப் ஹிட்லரின் நாஜி வதை முகாமில் பணிபுரிந்த 97 வயதான முன்னாள் நாஜி படைகளின் தட்டச்சர் மற்றும் ஸ்டெனோகிராஃபர்  யூதர்கள் இனத்தை அழிக்க ஜெர்மனியில் திட்டமிட்டு நடத்திய படுகொலையின் போது 10,505 பேரைக் கொன்றதில் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டார். 97 வயதான இம்கார்ட் ஃபியூஷ்னர் ஜெர்மனியின் ஸ்டுட்ஹாஃப் நகரில் இருந்த நாஜி வதை முகாமில் தனது பதின்ம வயதில் 1943 முதல் 1945 வரை டைபிஸ்டாக பணிபுரிந்துள்ளார். இர்கார்ட் ஃபர்ச்னருக்கு ஜெர்மனியின் இட்ஸேஹோவில் உள்ள நீதிமன்றம் செவ்வாயன்று இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியதாக பிபிசி தெரிவித்துள்ளது.

 

நாஜி குற்றங்களுக்காக கடந்த சில தசாப்தங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முதல் பெண் இவர்தான். இவருக்கு இரண்டு ஆண்டுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இவர் உடனடியாக சிறைக்கு செல்ல வேண்டியதில்லை. சிவில் பணியாளராக இருந்த போதிலும் வதை முகாம்களில் என்ன நடக்கிறது என்பதை முற்றிலும் அறிந்தவராகவே அவர் இருந்தார் என்பதை நீதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஸ்டுட்ஹாஃப் வதை முகாமில் நிலவிய மோசமான சூழலால் யூதர்கள், யூதர் அல்லாத போலந்து குடிமக்கள், போரில் பிடிபட்ட சோவியத் வீரர்கள் உள்ளிட்ட 65 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. 10,505 பேர் கொல்லப்பட உதவியாகவும், மேலும் 5 பேரின் கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாகவும் இம்கார்ட் ஃபோர்ச்னர் மீது  குற்றம்சாட்டப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் நாஜி முகாமில் அடைக்கப்படும் குற்றவாளிகள், போர்க்கைதிகள், கொடுமையான முறையில் கொல்லப்படுவது வழக்கமாக இருந்தது. அதுபோல,  போலந்தின் டான்ஸ்க் நகருக்கு அருகே ஸ்டுட்ஹாஃப் வதை முகாமில் அடைபட்டிருந்த ஆயிரக் கணக்கானோரை கொலை செய்ய 1945ம் ஆண்டு முதல் விஷவாயு உள்பட பல்வேறு கொடூர செயல்கள் மூலம் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது

இதுதொடர்பான விசாரணைகளை  வடக்கு ஜெர்மனியில் உள்ள இட்ஸெஹோ நகர நீதிமன்றம் விசாரிது வருகிறது. இந்த வழக்குகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும், , வதை முகாமில் இருந்து உயிருடன் மீண்டவர்களிடம் விவரங்களை  சேகரித்து விசாரணைகள் நடைபெறுவதற்குள் பலர் உயிரிழந்துள்ளனர்.

இறுதியாக விசாரணை கடந்த 2021ம் ஆண்டு தொடங்கியபோது, ஓய்வுக்கால இல்லத்தில் இருந்து தப்பிவிட்ட இம்கார்ட் ஃபோர்ச்னர் என்ப 97வயது மூதாட்டியை ஜெர்மனியின்   ஹம்பர்க் நகர தெருவில் காவல்துறையினர் கண்டுபிடித்து  விசாரணை நடத்தினர். இவர், போலந்தில் இருந்த ஸ்டுட்ஹாஃப் வதை முகாமில் பணியாற்றியது தெரிந்தது. இதையடுத்து, இவர்  நாஜி கொலைக் கருவியாக செயல்பட்டதாக 1955-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட அதன் கமாண்டர் பால் வெர்னர் ஹோப்பே விடம் பணியாற்றியதும் உறுதியானது.

இதையடுத்து, அவர்மீதான விசாரணை நடைபெற்றது.ஆனால், அவர் தொடக்க காலத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த நிலையில், சுமார் 40நாட்கள் விசாரணைக்கு பிறகே, அவர் தனது மவுனத்தை கலைத்து திடீரென பேசியதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

முதல் வார்த்தையாகவே, “அப்போது நடந்த விஷயங்களுக்காக என்னை மன்னியுங்கள்” என்று கூறியதாகவும், தொடர்ந்து பேசத் தொடங்கியவர்,  “ஸ்டுட்ஹாஃப் வதை முகாமில் அந்த நேரத்தில் இருந்தமைக்காக வருந்துகிறேன் என்று மட்டுமே இப்போதைக்கு என்னால் கூற முடியும்” என்று கூறியதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இம்கார்ட் ஃபோர்ச்னர் , அங்குள்ள ஹோப்பெயின் அலுவலகத்தில் பணிபுரிந்த பல தட்டச்சர்களுள் அவரும் ஒருவர். அதனால், அவரை விடுவிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் ஆதரவாக குரல் கொடுத்தனர். மேலும், இம்கார்ட் ஃபோர்ச்னர்  விடுவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில்  அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

ஆனால்,  இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஹிட்லரின் எஸ்.எஸ். படைப் பிரிவுத் தலைவராக பணிபுரிந்த ஹெய்ன்ஸ் ஃபுர்ஷிஸ்டம் என்பரை அவர் இம்கார்ட் ஃபோர்ச்னர் மணம் புரிந்தார். அதனால்,  இருவரும் ஸ்டுட்ஹாஃப் வதை முகாமில்தான் சந்தித்திருக்க வேண்டும் என்று கருதப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், அவரது கணவர், 1972-ம் ஆண்டு மரணம் அடைந்துவிட்டார். அதனால் அவரிடம் விசாரணை நடத்த முடியாத நிலையில், போலந்து வதைமுகாமில் இருந்து உயிருடன் மீண்ட ஜோசஃப் சாலமோனோவிச், நீதிமன்றத்தில் விசாரணையின் போது நேரில் சென்று சாட்சியம் அளித்தார்.

அதில், நாஜி படையினரால் கைது செய்யப்பட்ட தனது தந்தை 1944-ம் ஆண்டு   விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்டதாகவம், அப்போது தனக்கு  6 வயது என்று தெரிவித்துடன், அப்போது, அங்கு பணியாற்றியவர் இம்கார்ட் ஃபோர்ச்னர்  என்று உறுதி செய்தார். மேலும்,  அவர்தான் தனது தந்தையின் இறப்புச் சான்றிதழ் மீது முத்திரை இடுபவராக இருந்தார், அதனால், அவருக்கும், அங்கு நடந்த குற்றங்களில் தொடர்பு என்று குற்றம் சாட்டினார்.

இதைத்தொடர்ந்து, இம்கார்ட் ஃபோர்ச்னர்  மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு அவருக்கு இரண்டு ஆண்டு காலம் தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போது, 97 வயது மூதாட்டியான  இம்கார்ட் ஃபோர்ச்னரை சிறையில் அடைக்க முடியாது என்பதால், அவர் சிறார் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்தபோது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நேச நாடுகள் ஜெர்மனி மீது வலுவான தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருந்தது. இன்னொரு புறமிருந்து ரஷ்யாவும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருந்தது. ஜெர்மனி மீது இவ்வாறு குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தபோது, இரண்டாம் உலகப் போரின் இட்லர், பெர்லின் நகரில் அரசு தலைமை அலுவலக கட்டடத்திற்கு கீழே நிலத்தடியில் அமைக்கப்பட்டிருந்த சுரங்க மாளிகையில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பதுங்கியிருந்தார்.

1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதி ஜெர்மனி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்தது. இந்நிலையில் இட்லரும், அவரது மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர்களது உடல்கள் எதிரிகளின் கைகளில் கிடைக்கக்கூடாது என்ற இட்லரின் ஆசைப்படி எரித்து சாம்பலாக்கப் பட்டதாகவும் கூறப்பட்டது. இதுதான் உலகம் முழுவதும் அனைவருக்கும் தெரிந்துக் கொண்ட தகவல்… ஆனால் உண்மை என்ன என்பது ஹிட்லருக்குத்தான் தெரியும்.