டில்லி: விவிபேட்  100 சதவிகிதம் என்ன உத்தரவிட வேண்டும் என்ற வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தீர்ப்பு வழங்கும் என அறிவித்திருந்த நிலையில், இன்றைய விசாரணையின்போது, இதுதொடர்பாக விளக்கம் அளிக்க தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உத்தரவிட்டு வழக்கை மதியத்துக்கு உச்சநீதிமன்றம்  ஒத்தி வைத்துள்ளது.

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் கருவிகளில் பதிவான ஓட்டுகளை எண்ண கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா அமர்வு விசாரித்து வருகிறது.  இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை தேர்தல் ஆணையத்துக்கு எழுப்பிய நீதிபதிகள் இன்று இடைக்கால தீர்ப்பு வழங்கப்படும் என கடந்த விசாரணையின்போது அறிவித்தனர்.

அதன்படி, இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது,  நீதிபதிகள், விவிபேட் தொடர்பான வழக்கில் சில கேள்விகள் உள்ளன. கண்ட்ரோலிங் யூனிட்டில் மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரம் அல்லது விவிபேட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் உள்ளதா?, மைக்ரோ கண்ட்ரோலர் ஒரு முறை மட்டுமே புரோகிராம் செய்யப்படக்கூடியதா? , மைக்ரோ கன்ட்ரோல் யூனிட் கன்ட்ரோல் யூனிட்டில் பொருத்தப்பட்டுள்ளதா அல்லது விவி பேடில் பொருத்தப்பட்டுள்ளதா?,  தேர்தல் சின்னங்களை பதிவேற்றும் யூனிட்டுகள் எத்தனை உள்ளன?,  கன்ட்ரோல் யூனிட் மட்டும் சீலிடப்படுகிறதா? அல்லது விவிபேடு தனியாக வைத்து பாதுகாக்கப்படுகிறதா? என கேள்வி எழுப்பியதுடன்,  வாக்குப்பதிவு இயந்திரங்களின் ‘Source Code’ குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்ற மனுதாரர்கள் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.

இதுதொடர்பாக  தேர்தல்  ஆணையத்தின் தொழில்நுட்ப அதிகாரியை  நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை மதியம் 2 மணிக்கு ஒத்தி வைத்தனர்.

விவிபேட் (VVPat Machine) வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்…