நியூயார்க்

நியூயார்க் ஃபெடரல் நீதிமன்றத்தில் தொழிலதிபர் அதானி மீது குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.

பிரபல தொழிலதிபர் அதானி மீது சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளைப் பெற அமெரிக்க அதிகாரிகளுக்கு 25 கோடி டாலர்களுக்கு மேல் லஞ்சமாக கொடுக்க ஒப்புக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் தனது தவறை அமெரிக்க முதலீட்டாளர்களிடம் மறைத்து, அதானி தனது திட்டத்திற்காக பெரும் தொகையை திரட்டினார் என்றும் அந்தக் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் அதானியின் செயல் வெளிநாட்டு முதலீட்டு சட்டப்படி தவறானது எனக் கூறி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரில் கவுதம் அதானி மட்டுமின்றி அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர் பெயரும் இடம் பெற்றுள்ளது.