சென்னை’

மிழக  முதல்வர் மு க  ஸ்டாலின் வரும்  11 ஆம் தேதி கேரளாவுக்கு பயணம் செல்கிறார்,

கேரள மாநிலம் கோட்டயத்தில் வரும் 12ம் தேதி வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதல்வர்ர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பற்காக வரும் 11-ம் தேதி அவர் கேரளாவுக்கு செல்ல உள்ளார்.

இந்த விழா கேரள முதல்வே பினராயி விஜயன் தலைமையில் நடைபெற உள்ளது. அப்போது ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு திறந்து வைக்கிறார்.

அங்கு பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்பட கண்காட்சிக் கூடம், நூலகம், சிறுவர் பூங்கா ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.