கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் தனக்குப் பொருத்தமான கதையை தயார் செய்து தானே ஹீரோவாக நடிக்க முடிவு செய்தார். கோமாளி படத்திலும் இவர் சின்ன வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. இன்று ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி, பிரதீப் ரங்கநாதனின் படத்தை தயாரிப்பதை உறுதி செய்துள்ளார்.

கோமாளி படம் வெளியாகி வெற்றி பெற்ற போது, அப்படத்தின் இயக்குனர் அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதாக அறிவித்தனர். ஆனால், அது அறிவிப்போடு நின்றது. படம் முன்னோக்கி நகரவில்லை.